பக்கம் எண் :

கற்பியல் சூ.10179
 

அவர்     கன்னியில்  வரையப்பட்டாரும்  அதன்பின்பு  வரையப்பட்டாரும்  என   இருவகையார் -
அவ்விருவரும்  உரிமை  பூண்டமையாற்  காமக்கிழத்தியர்பாற்  பட்டனர்.  பரத்தையராவார்   யாரெனின்
அவர்  ஆடலும்  பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி   ஒருவர்
மாட்டுந்  தங்காதார்.  இவருள்ளும்
1  ஒருவரைப்பற்றி  மறுதலைப் பெண்டிரைச் சார்த்திக்   கூறுவனவும்2
காமக்கிழத்தியர்  கூற்றின்  பாற்படும்.  இவற்றின்  வேறுபாடு  அவரவர்  கூற்றானறிக.    இச்சூத்திரத்திற்
காமக்கிழத்தியென ஓதாது ‘கிழத்தியர்’ என ஓதுதலானும் பலவகையார் என்பது கொள்க.
  

புல்லுதன்   மயக்கும்   புலவிக்   கண்ணும்   என்பது   -  புல்லுதலைக்  கலக்கும்  புலவி  மாட்டுங்
காமக்கிழத்தியர் கூற்று நிகழும் என்றவாறு.
  

அஃதாவது முதிராத புலவி மாத்திரமாகிய புணர்ச்சியையுடன் பட்ட நெஞ்சத்தளாதல்.3
  

உதாரணம்:
  

*“பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு
மதிமொழியிடன் மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறுவாக
முதுமொழி நீராப் புலனால் உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசை சூழ்புனலூர
ஊரன் உரனல்லன் நமக்கென்ன உடன்வாளா
தோரூர் தொக்கிருந்த நின்பெண்டிரின் நேராகிக்
களையாநின் குறுவர்தெங் கதவஞ் சேர்ந்தசைத்தகை
வளையினவாய் விடன்மாலை மகளிரை நோவேமோ


1. இவருள்ளும்-காமக்கிழத்தியர் மூவர் பரத்தையர் ஆகியோருள்ளும். 

2. சார்த்திக் கூறுவன-தலைவனொடு சார்த்தி ஊடலிற் கூறுவன.

3. மிகாத புலவியுண்டு என்ற  அளவில்   உள்ள   நெஞ்சத்தளாதலும்   புணர்ச்சியை   உடன்பட்ட
நெஞ்சத்தளாதலும் புணர்ச்சியை உடன்பட்ட நெஞ்சத்தளாதலும்.

* பொருள்: உலக  முழுதாளும்  அரசர்க்கு,  அறிவுரை  கூறும் அமைச்சர்போல நூலாசிரியர்களால்
குற்றமான சொற்களைப் போக்கிய தம் காதுகளாகிய வயலில் ஆன்றோர் அறவுரை நீராக நாவாகிய
ஏரால் உழுது புலவர் தம் செய்யுள்களாகிய உணவைக் கூட்டாக வுண்ணும்படியான புனலூரனே!.