1. இளம்பூரணர் உரையினும் இவ்வுரை சிறக்கும். 2. பொருள்: தோழீ!முழவொலியொடு காண்பார்க்கு மகிழ்ச்சி மிக யான் கூத்தாட அதுகாண அவன் வந்த அவ்வளவிற்கே அவன் மனைவியானவள், கள்ளின் களிப்புடைய அஃதை என்பானின் பரிசிலர்க்குக் களிறும் கலனும் ஈயும்நாள் ஓலக்கத்தில் புகும் பொருநர் அறையும் பறையொலியினும் அடங்காமல் அவனை என்னொடு சேர்த்துக் கழறியுரைப்பாள் என்று கூறுவர். கச்சினனும் கழனினனும் தார்மார்பினனும் ஆகிய பொருநனை (ஆட்டனத்தியை) இவ்வழிக் கண்டீரோ என அவன் காதலி ஆதிமந்தியானவள் பித்துற்று வருந்துமாறு நேர் கிழக்கே ஓடும் காவேரி ஈர்த்துக் கொண்டு ஒழுகினாற்போல யானும் அவள் கணவனைச் சூள்கொண்டு கைபற்றிக் கோடலை எண்ணி விட்டேன். |