பக்கம் எண் :

கற்பியல் சூ.10197
 

தன்னை விசேட முண்டாகக் குறித்துக் கொண்ட கோட்பாட்டின் கண்ணும்.
 

உதாரணம்
 

*”புழற்காற் சேம்பின் கொழுமடலகலிலைப்
பாசிப் பரப்பிற் பறழொடும் வதிந்த
வுண்ணாப் பிணவி னுயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய்
வாளையொடுழப்பத்துறை கலுழ்ந்தமையிற்
றெண்கட்டேறன் மாந்திய மகளிர்
நுண்செயலங் குடமிரீஇப்பண்பின்
மகிழ்நன் பரத்தை பாடிய விழிணர்க்
காஞ்சி நீழற் குரவையயருந்
தீம்பெரும் பொய்கைத்துறை கேழூரன்
றேர்தர வந்த நேரிழை மகளி
ரேசுப வென்ப வென்னலனே யதுவே
பாகனெடி துயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற்றியானை நல்கன் மாறே
தாழும் பிறரு முளர்போற் சேறன்
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண்வாரா மாறேவரினே


* பொருள்:  சேம்பின்    இலையுடைய    நீர்ப்பரப்பில்  தன்   குட்டியுடன்  வசிக்கும்  பெண்  நாய்
உண்ணாமையால்   அதற்கு   இரை   தேடிக்கொணர  எழுந்த ஆண்  நாயானது  வாளைமீனொடு
பொருதலால்,  நீர்ப்  பொய்கை  கலங்கிட அதனை விட்டுக் கள்ளுண்டு காஞ்சிமர நிழலிற் சென்று தம்
கணவன்மாரின்  பரத்தமை யொழுக்கம் பற்றிப் பாடும் படியான பொய்கை யூரனானவன், தன்தேரில்
ஏற்றி  வந்த  பரத்தையர்  என்  நலனைப் பற்றி ஏசுவர் என்று கூறுவர் பிறர். அவர் அவ்வாறு பேசும்
பேச்சோடு  அவர்  அடங்காமல்  இருப்பது  எதுபோல்  என்றால்  யானை கொல்லாமையால்  பாகன்
உயிரோடு   இருப்பது  போலாகும்  அப்  பரத்தையரும்  பிறரும்  சிறப்புடையார்  போல  இறுமாந்து
செல்லுதற்குக்  காரணம்  அவர்கள்  கொண்ட முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தாடும் இடத்துக்குயான்
செல்லாமையே  யாகும். இனியான் சென்றால் சூரியன் போம் பக்கமாகவே திரியும் நெருஞ்சிப் பூப்போல
என்  பக்கமாகவே  அவனைத்  திரியுமாறு செய்யேனாயின் சோழரது வல்லத்துப் புறங்காட்டில் போரில்
உடைந்தோடிய ஆரியப் படைபோல என் கைவளையல்கள் உடைவனவாக.