பக்கம் எண் :

198தொல்காப்பியம் - உரைவளம்
 

வானிடைச் சுடரொடு திரிதகு நெருஞ்சி போல
வென்னொடு திரியேனாயின் வென்வேன்

மாரியம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
யாரியர் படையி னுடைகவென்
னேரிறை முன்கை வீங்கிய வளையே”

(அகம் - 336)
 

இதனுள்     “யானவண் வாராமாறே”   எனத்தான் மனையோளைப் போல் இல்லுறைதல் கூறி யாண்டுச்
செல்லிற்  சுடரொடு    திரியும்  நெருஞ்சி   போல  என  மகளிரை  யான் செல்வுழிச் சொல்லுஞ் சேடியர்
போலத் திரியும்படி பண்ணிக் கொள்வலெனக் கூறியவாறு காண்க.
 

எண்ணிய  பண்ணை-தலைவற்குத்   தகுமென்று  ஆய்ந்த  யாறுங்  குளனும்  காவும் ஆடிப் பதியிகந்து
நுகர்வனபோல் வனவற்றுக்கண் தாமும் விளையாடுதற் கண்ணும்.
 

உதாரணம்
 

“கூந்தாலம்பன் முழுநெறியடைச்சிப்
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
யாமஃதயர்கஞ்சேறுந் தானஃ
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர்
நுகப்படக் கடக்கும் பல் வேலெழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே”
1

(குறுந்-80)
 

இதனுள் “யாமஃதயர்கஞ்சேறும்” என விளையாட்டுக் கூறினாள்.
 

என்றிவற்றொடு     பிறவும்-இக்கூறியவற்றின்    கண்ணும்    புதல்வற்  கண்டு  நனியுவப்பினும்  கூற்று
நிகழுமென்று    கூறப்பட்ட    இவ்வெட்டோடே    பிற    கூற்றுக்களும்,   கண்ணிய   காமக்கிழத்தியார்
மேன-இக்கருதப்பட்ட காமக்கிழத்தியரிடத்தன என்றவாறு.
 

கூற்றென்பது     அதிகாரத்தான் வருவிக்க  ஒடுவென்றது  உருபு. கண்ணுதல்-ஒருமனைத் தெருவின்கண்
உரிமை  பூண்டு   இல்லற  நிகழ்த்துவரென்று   சிறப்புக்  கருதுதல்,   பிறவும்   என்றதனால்  தலைவனை
என்னலந்தாவெனத் தொடுத்துங் கூறுவனவும்,


1 பொருள்: பக்கம் 188ல் காண்க.