1 பொருள் : தலைவனே! நன்னன் என்பான் புன்னாட்டைச் சினந்து எழுந்த போரில் பாழி என்னும் இடத்தில் நன்னன் பகைவனாகிய ஆஅய் எயினன் தன் மக்களைப் பார்த்து அஞ்சல் என்று கூறி அவர்களைக்காக்கத் தன் சொல் தவறாதபடி அங்கு வந்த மிஞிலி என்னும் நன்னனின் நட்பாளனோடு பொருது உயிர் துறந்தான். நீயோ முன்னர்க் கடவுள் முன்னர் என்கைப் பற்றிக் கூறிய சூளுறவு நீங்கி என் ஆர்வம் மிகவும் நின் மார்பை எனக்குத் தாராமல் பிறன் ஆயினாய். இனியுன்னை விடமாட்டேன். செல்லாதே. ஆதிமந்தி பலவாகப் புலந்து தங்க அவள் காதலனாகிய ஆட்டன் அத்தியைக் காவிரி கொண்டொளித்தது போல நின் மனைவி நின்னைக் கொண்டு செல்லினும் செல்வள். அதற்கு அஞ்சுவேன். அதனால் ஆரிய வீரர் அலறக் தாக்கி வடமலையில் வில்லைப் பொறித்து ஆரிய வேந்தரைப் பிடித்து வந்த சேரனது வஞ்சியூர் போலும் என் வளமிக்க அழகை என்னிடம் தந்து செல்வாயாக.