1 பொருள்: தோழீ! மாரிக்காலக் கொக்கின் அலகு போலும் ஆம்பல் உள்ள தண்துறை யூரனானவன், என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து வளையலைக் கழற்றிய போது உண்டான பூசலால் சினந்த முகத்தோடு அவனைப் பார்த்து ‘நான் இதனை நின் மனைவிக்குச் சொல்வேன்’ என்றதனால், தேர்வண்மலையனது அவை முன்னர்க் கூத்தர் இயக்கும் முழவின் கண்ணிடம் அதிர்வது போல் நடுங்கிய நல்லதையே ஆள்பவனாகிய அவனது நடுங்கு நிலையை நினையுந் தோறும் சிரிப்பேன். 2 பொருள்: தலைவ! ஒருத்தி அடங்காத முயக்கத்தால் தளர்ந்து வந்து நின் கதவைத் தட்டியது சரியோ? |