பக்கம் எண் :

204தொல்காப்பியம் - உரைவளம்
 

இனமீன் இருங்கழிஓதமல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந்துறைவன் கொடுமை
நம்முள் நாணிக் கரப்பாடும்மே”
1

(குறுந்-9)
 

எனவும்,
 

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅதுடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்தட்ட தீம்புளிப்பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே”
2

(குறுந்-167)
 

எனவும்,
 

“கானக் கோழிக் கவர்குரற் சேவல்
நுண்பொறி எருத்தின் தண்சிதருறைப்பத்
தேநீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூரோளோ மடந்தை வேனூர்
வேந்துவிடு தொழிலொடு வரினுஞ்
சேர்ந்துவரல் அறியா செம்மல்தேரே”
3

(குறுந்-242)
 

எனவும்,


1 பொருள்: பக்கம் 166ல் காண்க.

2 பொருள்:    முதிர்ந்த தயிரைப் பிசைந்த மெல்லிய விரலைத் துடைத்த ஆடையை மாற்றாது உடுத்தித்
தன்  குவளைபோலும்  மையுண்ட  கண்களில்  தாளிப்பின்  புகைபொருந்தத் தானே துழாவிச் சமைத்த
இனிய  புளிக்குழம்பைக்  கணவன்  மிக  இனிது  என்று  சொல்லி  உண்ணுதலால் தலைவியின் முகம்
நுண்ணிதாக  மகிழ்ச்சி  கொண்டது.  (இதைத்தோழியோ  அன்றி வேறு வாயிலோ தன்னுட் கூறியதாகக்
கொள்க).

3 பொருள்:  இது   செவிலி   நற்றாய்க்குக்   கூறியது. தோழீ! தன்பெடையைக் கூவும் காட்டுக் கோழிச்
சேவலின்  பிடரியில்  புதல்நீர்  துளிக்கும்படியாக  உள்ள மலர் மணம்மிக்க முல்லை நிலத்துச் சீறூரில்
மகிழ்வுடன்  உள்ளாள் நம் மடந்தை. அவள் தலைவன் தேரும் மன்னன் ஏவலால் வேற்றூர் சென்றுவர
நேரினும் வினைமுடித்து அங்கேயே தங்காமல் உடன் மீண்டு வந்து விடும்.