பக்கம் எண் :

கற்பியல் சூ.11209
 

செவிலி கூற்று
 

151.

கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக் குரிய வாகும் என்ப.
 

(12)

பி.இ.நூ.
 

நம்பியகப் 104, இல. வி. 472.
 

முன்வரு நீதியும் முயங்கியல் முறையும்
பின்வரு பெற்றியும் பிறவும் எல்லாம்
தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும்
உற்ற அறிவர்க்கும் உரிய என்ப
 

இளம்
 

என்-எனின், செவிலிக்குரிய கூற்று வருமாறுணர்த்திற்று.
 

(இ-ள்)    இறந்த   காலத்தினும்   நிகழ்காலத்தினும்    எதிர்   காலத்தினும்   தன்   குலத்திலுள்ளார்
வழிகொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக்கு உரித்து என்றவாறு,
 

இறந்த   கால முதலியவற்றாற்   கூறுதலாவது முன்புள்ளார் இவ்வாறு செய்து நன்மை பெற்றார் இவ்வாறு
செய்து  தீமை  பெற்றார் எனவும் இப்பொழுது  இன்னோர்   இவ்வாறு  செய்து பயன்பெறாநின்றாரெனவும்
இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவுங் கூறுதல்.
 

அவை,   அறனும்    பொருளும்    இன்பமும் பற்றி  நிகழும்.  அவையாவான,  தலைமகள்  மாட்டும்
உலகத்தார் மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல்.
1
 

அவை,  மனையாளைப்  பற்றி  வருதலிற்  காமதந்திரத்துட்   பாரியாதிகார2மெனக் கூறப்பட்டன. அறம்
பற்றி வருதல்


1 தலைமகன் மாட்டும்  உலகத்தார் மாட்டும் அறனும்  பொருளும் இன்பமும் பற்றி ஒழுகுந்திறம் கூறுதல்
என இப் பகுதிக்குப் பொருள் காண்க.

2 பார்யாதிகாரம்-பார்வை-மனைவி-மனைவியைப் பற்றிய அதிகாரம்.