பக்கம் எண் :

கற்பியல் சூ.12213
 

“வாணுதலரிவை மகன் முலையூட்டத்
தானவள் சிறுபுறங் கவையினனன்று
நறும்பூந்தண்புற வணிந்த
குறும்பல் பொறைய காடுகிழவோனே”
1

(ஐங்குறு - 404)
 

இவை உவந்து கூறியன.
 

“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகையேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ
லுண்ணென் றோக்குபு புடைப்பத் தத்துற
றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப் பந்தரோடி
யேவன் மறுக்குஞ் சிறுவிளையாட்டி
யறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந்தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறனுற்றெனக்
கொடுத்த தாதை கொழுஞ்சோறுள்ளா
ளொழுகு நீர்நுணங்கறல் போலப்
பொழுது மறுத்துண்ணுஞ் சிறுமதுகையளே”
2

(நற்-110)
 

இது, மனையறங் கண்டு மருண்டு உவந்து கூறியது.
 

“அடிசிற் கினியாளையன் புடையாளைப்
படுசொற் பழிநாணுவாளை-யடிவருடிப்
பின்றூங்கி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தா
லென்றூங்குங் கண்களெனக்கு”
3


தலைவனும்   தலைவியும்  இருக்கும்  கிடக்கை  மிக இனியதாம். நீலநிற அகன்ற இடமுடைய வானம்
போர்த்த இவ்வுலகமும் வானுலகமும் பெறுதற்கரிய இன்பம் இது ஆதலான்.

1 பொருள்:  நல்ல பூங்காடுகள் சூழ்ந்த பல குன்றுகளையுடைய நாட்டுக்கு உரிமையுடைய தலைவன் தன்
ஒளிமிக்க  நுதலுடைய அரிவையாகிய  தன்  மனைவி  புதல்வனுக்குப்  பால் ஊட்டத் தான் அவளின்
முதுகுப்புறமே மிகத் தழுவினான்.

2 பொருள்: பக்கம் 205ல் காண்க.

3 பொருள்:பக்கம் 211ல் காண்க.