பக்கம் எண் :

214தொல்காப்பியம் - உரைவளம்
 

என்னும்   பாட்டுச்   செவிலி   கூற்றன்றாயினுந்     தலைவன்  மனையறங்கண்டு கூறியதன் பாற்படுமெனக் கொள்க.
 

அறிவர் கூற்று
 

152.

சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய.
 

பி. இ. நூ.
 

நம்பிகம் 104, இல. வி. 472..

(13)
 

முன்வரு நீதியும் ... அறிவர்க்கும் உரிய
 

இளம்
 

என்னுதலிற்றோவெனின் அறிவர் கூற்று நிகழ்த்துமாறுணர்த்திற்று.
 

இ-ள் : மேற் செவிலிக்குரித்தாகச் சொல்லப்பட்ட கிளவி அறிவர்க்கும்1 உரிய என்றவாறு.
 

உதாரணம் மேற்காட்டப்பட்டன
 

நச்
 

இஃது, அறிவரது கூற்றுக் கூறுகின்றது.
 

இதன்  பொருள் : முற்கூறிய நல்லவையுணர்த்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி  செவிலிக்கேயன்றி
அறிவர்க்குமுரிய என்றவாறு.

 

என்றது,     அறியாத     தலைவியிடத்துச்     சென்று     அறிந்தார்     முன்னுள்ளோர்    அறம்
பொருளின்பங்களாற்கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம்.
 

உதாரணம்
 

“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யுமழை”

(குறள் -55)
 

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித்தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

(குறள் -56)

1 அறிவர் என்பார் தம் அறிவால் மக்கள் அறிவைத் தீதின் நீக்கி நன்றின்பால் உய்ப்பவர்.