“மனைத்தக்க மாண்புடையளாகித்தற் கொண்டான் வளைத்தக்காள் வாழ்க்கைத்துணை” |
(குறள் - 51) |
இவை நல்லவையுணர்த்தல். |
“எறியென்றெதிர் நிற்பாள் கூற்றஞ்சிறுகாலை யட்டிற் புகாதா ளரும்பிணி-யட்டதனை யுண்டி யுதவாதா ளில்வாழ்பே யிம்மூவர் கொண்டானைக் கொல்லும்படை”1 |
(நாலடி-363) |
“தலைமகனிற்றீர்ந் தொழுகல்தான் பிறரிற்சேற னிலைமையிறீப் பெண்டிர்ச் சார்தல் - கலனணிந்து வேற்றூர்புகுதல் விழாக்காண்டனோன்பெடுத்தல் கோற்றொடியார் கோளழியுமாறு” |
(அறநெறி-94) |
இவை அல்லவை கடிதல், இவை அறிவர் கூற்றாதலிற் புறப் புறப் பொருளாயிற்றென உணர்ந்து கொள்க. |
153. | இடித்துரை நிறுத்தலும் அவர தாகும் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின். | (14) |
இளம் |
என்-எனின், அறிவர்குரியதோர் மரபு உணர்த்திற்று. |
(இ-ள்) கழறிய எல்லையின் கண்ணே நிறுத்தலும் அறிவர்க்குரிய, தலைவனும், தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின் என்றவாறு, |
உதாரணம் |
“உடுத்துந்தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த ஆயமொடுதுவன்றி விழவொடு வருதி நீயே இஃதோ |
1 பொருள் : அடிப்பாய் என்று எதிர்த்து நிற்பவள் கூற்றம்; சிறு காலைப் பொழுதில் அட்டிற்பக்கம் சென்று உணவு அடும் தொழில் செய்யாதவள் நோய் சமைத்த உணவைப் பரிமாறாதவள் பேய். இம் மூவரும் கணவனைக் கொல்லும் படைபோல்வாராவார். |