1 பொருள்: தலைவ! தழையுடையுடுத்தும் மலர் தொடுத்துச் சூடியும் பொன் அணிகள் பூண்டும் மலரைக் கூந்தலில் செருகியும் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டமொடு விழாக் கொண்டு வருகின்றாய். ஆனால் இவ்வூரார், ‘இதோ பார்’ என்று ஒருவருக்கொருவர், ‘இத்தலைவன் வாழ்க்கை ஒரு பசுவின் வளத்தால் உண்ணும் வறிய வாழ்க்கை; அது இப்பேரழகுக் குறுமகள் வாழ்க்கைத் துணையாக வந்தமையால் இப்பொழுது அவன் விழவயரும் சிறப்புடையதாயிற்று’ என்று கூறுவர். இவ்வாறு கூறுவதன் மூலம் அறிவர் தலைமகனைத் தலைவியை நீங்காது ஒழுகுக என நெறிப்படுத்தினார் எனக் கொள்க. 2 பொருள்: பக்கம் 169-170 ல் காண்க. |