இதன்பொருள் : - கிழவனுங் கிழத்தியும் அவர் வரை நிற்றலின் - தலைவனுந் தலைவியும் அவ்வறிவரது ஏவலைச் செய்து நிற்பராதலின் இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும். அவரைக் கழறி ஓரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் என்றவாறு. |
அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவி மாட்டு ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையுங் கழறுப. |
“உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி விழவொடு வருதி நீயேயிஃதோ வோரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தென வினிவிழவாயிற் றென்னுமிவ்வூரே”1 |
(குறுந் - 295) |
இது தலைவனைக் கழறியது. |
“மனைமாட்சியில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினுமில்” |
(குறள் - 52) |
இது, தலைவியைக் கழறியது. |
தலைவன் ஊடல் |
154. | உணர்ப்புவரை யிறப்பினும் செய்குறி பிழைப்பினும் புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய. | (15) |
பி. இ. நூ. |
இறையனார் அகப்பொருள் 45 |
உணர்ப்புவயின் வாராவூடல் தோன்றின் புலத்தல் தானே கிழவற்கும் வரையார். |
தமிழ்நெறி விளக்கம் 25. |
கிழவன் புலத்தலும் ... ஆயிடைப் பிரிவே. |
1 பொருள்: பக்கம் 216ல் காண்க. |