பக்கம் எண் :

218தொல்காப்பியம் - உரைவளம்
 

இளம்
 

என்-எனின்  தலைமகன்  புலக்குமிடம்  கூறுதல்  நுதலிற்று. (இ-ள்) புலவி அண்மைக் காலத்தது, ஊடல்
அதனின்மிக்கது. பொருள் சூத்திரத்தான் விளங்கும்”
1
 

உதாரணம்
 

“எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைம திவாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்

பல்லிருங் கூந்தலாரே நினக்கே”
2

(குறுந் - 19)
 

எனவரும்.
 

நச்
 

இது, தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது.
 

இதன் பொருள்: உணர்ப்புவரை   இறப்பினும் -கற்பிடத்துத்   தலைவி   ஊடியவழி   அவன்  தேற்றத்
தேறுமெல்லை  இகந்தனளாயினும் செய்குறி பிழைப்பினும்-களவின்கட்  டலைவி  செய்த  குறியைத்   தானே
தப்பினும்,  புலத்தலும் ஊடலுங் கிழவோற்கு  உரிய  -  உள்ளஞ்சிறிது   வேறுபடுதலும் அவ்வேறுபாடுமிக்கு
நீடுநின்று தேற்றியக்கால் அது நீக்குதலுந் தலைவற்குரிய என்றவாறு,
 

எனவே,     கற்பிற்கும்,   களவிற்கும்   புலத்தலும் ஊடலுமுரிய என்றார். புலவியும் ஊடலுங் கற்பிற்கே
பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை  உரியவென்கிறார்.   அவை   களவிற்குஞ் சிறுபான்மை உரிமை
பற்றிச் சேரக் கூறினார், சூத்திர சுருக்கம் நோக்கி.


1 பொருள் :  நச்சினார்க்கினியர் எழுதியவாறே   கொள்க.  அண்மைக்  காலத்து-தோன்றிய  சிறிதுகால
அளவில் நின்று தீர்வது. ஊடல் தோன்றிய காலத்திலிருந்து நெடுநேரம் இருந்து உணர்த்தத் தீர்வது.

2 பொருள்:  நெஞ்சமே! எவ்வி என்னும் வள்ளலை யிழந்தமையால் வறியரான பாணரது தலை அவனால்
தரப்படும்  தாமரைப் பூவை  அணியப் பெறாமல் புல்லென்ற நிலையடைந்தது போல நீயும் புல்லென்று
வருந்துக.  என்எனின்  மனைத்தோட்டத்து  மரத்தில்  படரும்  முல்லை  இரவில்  மணப்பது போலும்
மணம்மிக்க கூந்தல் உடைய இவள்
நமக்கு என்ன உறவுடையவள்? உறவு இல்லை யாதலின்,