பக்கம் எண் :

கற்பியல் சூ.15219
 

“எவ்வியிழந்த வறுமை யாழ்ப்பாணர்”

(குறுந்-19)
 

இது கற்பிற் புலந்தது.
 

“தீதிலேமென்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதென்று மெங்கண் மறுத்தரவில்லாயின்”

(கலி -81)
 

என்பது ஊடல், பிறவிடத்தும் ஊடுதலறிந்து கொள்க.
  

“கலந்தநோய் கைம்மிகக் கண்படாவென்வயிற்
புலந்தாயு நீயாகிற் பொய்யானே வெல்குவை”

(கலி - 46)
 

என்பது குறிபிழைத்துழிப் புலந்தது.
 

“குணகடற்றிரையது பறைதபுநாரை”

(குறுந்-128)
 

என்பதனுள்,   நாரை   தெய்வங்   காக்கும்  அயிரை இரையை வேட்டாற்போல் நமக்கு அரியளாயினாள் நீ
வேட்டாயென்பத  னாற்  குறிபிழைத்துழி   ஊடினமை   கூறிற்று. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து
கொள்க.

 

தோழி கூற்று
 

155.

புலத்தலும் ஊடலும் ஆகிய விடத்தும்
சொலத்தகு கிளவி தோழிக்குரிய.
 

(16)

இளம்
 

இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று*
 

“அலந்தாரை யல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லாவிடல்”
1

(குறள் - 1303)
 

இது கற்பு.


* இச்  சூத்திரப்  பொருள்:  புலவியும்   ஊடலும்  தலைவன்  தலைவியரிடத்துமிக்குத் தோன்றிய போது
ஆற்றுவித்தற்குக் கூறும் சொற்கள் தோழிக்கு உரியவாம்.

1 பொருள் :  தம்மிடம்  புலவி  கொண்டவரை  அது  நீக்கிப்  புல்லாது  விடுதலானது,  முன்னமேயே
துன்பமுற்றவரை மேலும் துன்பமான நோயைச் செய்வது போலாகும்.