பக்கம் எண் :

கற்பியல் சூ.16221
 

இன்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே”1
 

“அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப்
புலந்தாரைப் புல்லாவிடல்”

(குறள்-1303)
 

இவை கற்பில் தலைவி குறிப்பினுள் தோழி கூற்று வந்தன.
 

“புலந்தாயு நீயாகிற் பொய்யானே வெல்குவை”

(கலி - 46)
 

என்று களவில் தோழி கூறினாள் தலைவி குறிப்பினால்
 

“கனையபெய னடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅன்
புனையிழாயென்பழி நினக்குரைக்குந் தானென்ப
துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன்

னளிநசைஇ யார்வுற்ற வன்பின்னேன்யானாக”
3

(கலி - 46)
 

எனத்தோழி சொல்லெடுப்பதற்குத்   தலைவி  சிறுபான்மை கூறுதலும்  ஈண்டு  ‘உரிய’ என்றதனாற் கொள்க.
 

“யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
றானூடயானுணர்த்தத் தானுணரான் - றேனூறுங்
கொய்தார் வழுதிக் குளிர்சாந்தணியகல

மெய்தா திராக் கழிந்தவாறு”
4

(முத்தொள்ளாயிரம் - 104)


1 பொருள்: தன்னையீனும்  தாயின்  உயிரைப் போற்றாத கூரிய உகிருடைய நண்டினை நரிதின்று ஓடும்
ஊரனே! அன்பை முதலாகக் கொண்டு வந்த காதலை இப்பைந் தொடியுடைய தலைவி மாட்டுப் பெற்றது
என்?

2 பொருள்: பக்கம் 219ல் காண்க.

3 பொருள்:    தோழீ! மழைத்துளி பெறும் வேட்கையால் வானத்துமிசையிருந்து பாடும் வானம்பாடிபோல
யான்  அவரது  இருவகைக்  குறியிடத்தும் பெறும் அவர் அருளை விரும்பி நிறைந்த அன்புனையேன்
யானாக இருக்க  அவர்  மழை  பெய்த  நடு  இரவில்  யான்  இடம்  மாறிப்போக அதனால் இரவுக்
குறிவாய்க்காமல் என் மீது கொண்ட பழியை நினக்கு அவர் உரைப்பர்.

4 பொருள்:   தோழியே!  தேனூறும் கொய்யப்பட்ட மலர் மாலையுடைய பாண்டியனது அழகிய மார்பை
யான்  கூடாமலேயே  இராப் பொழுது கழிந்தது  எவ்வாறென்றால்  முதலில்  யான்  ஒரு காரணத்தை
மேலிட்டு ஊடல் கொள்ள அதை அவர் உணர்த்த நான் தெளியா