தவளாயினேன். அதுகண்டு அவர் என்பால் ஊடல் கொள்ள யான் அவரைத் தெளிவித்தும் தான் உணரார் ஆயினார். இப்படியே மாறிமாறி ஊடலும் தெளிதலும் ஆகப் பொழுது கழிந்தது. 1 சூத்திரப் பொருள் : தலைவனின் பரத்தமை யொழுக்கத்தை மறுப்பதற்காகவும், தலைவி அவ்வொழுக்கத்தை மறுக்க அறியாத மடமைப்பட்ட அறிவுக்குரியளாய் இருக்கும் காரணத்துக்காகவும் தோழியானவள் தானே தலைவனிடம் ‘நீ எம் தலைவியிடம் அன்புடையையல்லை; இவட்குக் கொடுமையே செய்கின்றாய்’ என்று கூறுதற்கும் உரியள் என்றவாறு. 2 பொருள்: தலைவ! மகிழ் செய்யும் தேன்மொழியுடையாளின் இளமுலை தோன்றும் பருவத்தே அவளுடன் கூடிய கூட்டத் தொடர்பை அவளின் கண்கள் நீர் உறைத்துக் காட்டவும் அதற்காகக் கலங்காமல் விட்டுச் |