நச் |
இது சொல்லத்தகுங் கிளவியேயன்றிச் சொல்லத்தகாக் கிளவியுந்தோழி கூறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது. |
இதன்பொருள் : பரத்தைமை மறுத்தல் வேண்டியும்- தலைவன் படிற்றுள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல் விரும்பியும் கிழத்தி மடத்தகுகிழமை உடைமையானும் தலைவி அவன் பரத்தைமை அறிந்தேயும் அவன் கூறியவற்றை மெய்யெனக்கொண்டு சீற்றங் கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன அறிந்தொழுகும் உரிமையுடையவளாகிய எண்மையானும் அன்பிலை கொடியை என்றலும் உரியள் - தலைவனை அன்பிலையென்றலுங் கொடியையென்றலு முரியள் தோழி என்றவாறு. |
கொடுமை கடையாயினார் குணம். களவினுள் தன் வயினுரிமையும் அவன் வயிற்பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க. |
உதாரணம் |
“கண்ட வரில்லென வுலகத்துளுணராதார் தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளு ணெஞ்சறிந்த கொடியவை மறைப்பினுமறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை யாகலின் வண்பரி நவின்றவயமான் செல்வ நன்கதை யறியினு நயனில்லா நாட்டத்தா லன்பிலை யெனவந்து கழறுவலையகேள் மகிழ்செய்தே மொழித் தொய்யில் சூழிளமுலை முகிழ்செயமுள்கிய தொடர்பவளுண்க ணவிழ் பனியுறைப் பவுநல்காது விடுவா யிமிழ்திரைக் கொண்க கொடியைகாணீ! இலங்கேரெல்வளையேர் தழைதைஇ நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப் |
செல்வாயாயினை. நீ மிகக் கொடியை. சேர்ப்பனே! விளங்கும் அழகிய ஒளிமிக்க வளையலணிந்த இவள் தழையுடையுடுத்தும் இளம் பருவத்தே அழகு மேல்மேல் வளரும்படி நீ புணர்ந்த புணர்ச்சியினை அவள் உடல் வாடி நின்னை வெறுத்து அழாநிற்கக் கண்டும் கைவிடுகின்றாய். நீ கொடியை. |