1. பொருள்: கள்மிக்க சாடியில் முகக்குங் கோய் என்னும் கலம் பொத்துதலால் கள்ளானது மழைத் துளிபோலத் தெருவில் துளிக்கும்படியான பலவகை நெற்களையுடைய வேளூர்வாயிலிடத்து, பூமாலையில் வண்டு மொய்க்காது கழியும்படியான பலிபெறும் தெய்வமானது நான் நீ ஐயுறும் பரத்தையுடன் புனலாடினேனாயின் என்னை வருத்துவதாக என்று தன் மனைவியைத் தலைவன் தேற்றுவானாயின், நேற்று திருமண அணியுடன் பொலிந்த நம்மோடு காவிரிப் புது வெள்ளத்தில் களிறுபோலும் தெப்பத்தைத் தழுவி நீராடியோர் யார் தாம்? அத்தலைவன் அல்லனோ? - இது உழையோர் கேட்கப் பரத்தை கூறியது. 2. பொருள்: மகிழ்நனின் பெண்டிர் இரங்கத்தக்காராவர். அவனை நம்பால் வராமற் பிணிக்கத் தெளியாராய் நாம் அழும்படிச் செய்தாராகிய தலைவன் மார்பை இப்பரத்தையர் வவ்வினர் என்று எம்மைப் பழிதூற்றுவார் போலத் தம்பழியையே பெரிய அறியாமையுடையர். |