1. பொருள்: தோழீ! வயது முதிர்ந்த சிச்சிலிப் பறவையானது, தாமரை பூத்த வயலில் நெற்பொரியைத் தூவினாற்போல் பிறழும் சிறு மீன்களை உண்ணத் தாமரை இலையில் மெல்ல மெல்ல அசைந்து வந்து தங்கும் படியான நீர்த்துறையுடைய ஊரனாகிய தலைவனது மனைவியானவள், அவனை நம்மொடு சார்த்திப் புலந்து பேசும் என்பர். நாம் அவ்வாறு புலந்து பேசும்படியாக அவனொடு ஒன்றும் செய்யவில்லையென்றாலும் அவள் கூறும் பழியினின்றும் மீளேம் ஆதலின், கொற்றச் செழியன் போரில் பகையை அடுந்தோறும் களிற்றை உணவாகப் பெறும் பாணனானவன் அடிக்கும் தண்ணுமையின் கண்ணிடம் அதிர்வதுபோல அவள் வயிறு அலையும்படி நாம் நம் வளையல் ஒலிக்கக் கைகளை வீசியவாறு சிறிது பொழுது அவள் இருக்குமிடமாக உலாவி வருவோம். வருவாயாக, |