பக்கம் எண் :

184தொல்காப்பியம் - உரைவளம்
 

“கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச்செல்லுந்
தளர் நடைகாண்டல் இனிது மற்றின்னாதே
உளமென்னா நுந்தை மாட்டெவ்வம் உழப்பார்
வளைநெகிழ் பியாங் காணுங்கால்”
  

“ஐய, திங்கட்குழவி வருகவென யான்நின்னை
அம்புலி காட்டல் இனிது மற்றின்னாதே
நல்காது நுந்தை புறமாறப் பட்டவர்
அல்குல்வரி யாங்காணுங் கால்”
  

“ஐய எம். காதில் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும்
போதில்வறுங் கூந்தற் கொள்வதை நின்னையான்
ஏதிலார் கண்சாய நுந்தைவியன் மார்பில்
தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய
கோதை பரிபாடக் காண்கும்”   

(கலித்-80)
 

எனவரும்.


1. பொருள்:  மகனே! நின்  அன்பை  வெறுப்பார்  வெறுக்க. அவர்க்கு மாறாக நின் தலையில் மின்னும்
முக்காழ் அணியை  நின்னைப் பெற்றயாம் காணக்காட்டி முத்துகளை ஓரத்தில் பதித்துப் பவழத்தாலான
தட்டில்  உள்ள கவளத்தை உண்ணுதலறியாத நின் (மர) யானையைக் கயிற்றாற் கட்டி மெல்ல மெல்லக்
காலிற் பூட்டிய செச்சையொலிப்ப வளைத்து வளைத்து இழுத்து என் பக்கம் வருவாயாக.

மணியார்ப்பச்   சாய்ந்துவரும்  நின்தளர்நடைகாண்டற்கினியது;  ஆனால்  யாம் உள்ளேம் என்பதை
நினையாத நின் தந்தையிடம் மயங்கத்  துன்புறுவார்  வளையல்   நெகிழ்வதையாம்   காணும்  காட்சி
இன்னாதாகும்.

மகனே!  அழகிய  நோக்கினையாய்  அத்தத்தா என்னும் நின் மழலைச் சொல் கேட்க இனிதாகும். நின்
தந்தையிடம் சாய்ந்து சாய்ந்து துன்புறுவார் நோய் காணும் காட்சி இன்னாதாகும்.

மகனே! நினக்கு நிலவே வருக என்று  அம்புலி  காட்டுவது இனிது. ஆனால் நின்தந்தை புறமாறப்பட்ட
பரத்தையரது  அங்குற்  பசப்புவரி காணும் காட்சி இன்னாது.

மகனே!  எங்காதணியை  வாங்கிச்  சென்றுவருந் தோறும் நின்னை எம் கூந்தலில் (தலையில்) வைத்துக்
கொள்வது;  நின் தந்தையின்  மார்பு  மாலையைப்  பறித்து ஆடுதற்காக. அதனால் நின் தந்தை கண்டு
பரத்தையர் பால் அன்பு குறைவான்.