பக்கம் எண் :

கற்பியல் சூ.10185
 

மறையின்     வந்த  மனையோள்1  செய்வினை  பொறியின்று  பெருகிய  பருவரற்    கண்ணும்
என்பது-களவின்  வருகின்ற  மனையோள் செய்வினை பொறையின்றிப் பெருகிய துன்பத்தின் கண்ணும்
என்றவாறு.
  

உதாரணம்:
  

“வாளை வாளிற் பிறழநாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்குங்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ஆம்பல் உருவநெறித்தமை
ஐதக லல்குல் அணிபெறத்தைஇ
விழவிற் செலீஇயர் வேண்டுமன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையாமையோ அரிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்
வரைவேய் புரையும் நற்றோள்
அளிய தோழி தொலையுந பலவே”
2

(நற்றிணை 390)
  

இது, பரத்தையராகி வந்த காமக் கிழத்தியர் கூற்று.
  

காதற்  சோர்விற்  கடப்பாட்டாண்மையிற்  றாய்  போற் கழறித்தழீஇய மனைவியை காய்வின்றவன்வயிற்
பொருத்தற்
  


1. மறையின்  வந்த  மனையோள்-களவொழுக்கம்  ஒழுகிப்  பின்  மணந்து  வந்து  இல்லறம் நிகழ்த்தும்
தலைவி. அவள் செய்வினையாவது தலைவனை வயப்படுத்தி மணந்தது.

2. பொருள்:     தோழீ!  கைவண்மையுடைய  கிள்ளிவளவனது வாளை மீன் வாள்போற் பிறழவும் அதை
உண்ணாமல்  நீர்  நாய்  தினமும் உறங்கும்படியான வெண்ணி என்னும் ஊரில் சூழ்ந்த வயலில் உள்ள
ஆம்பல் தழையை இடையில் அழகுற அணிந்து இவ்வூர் விழாக்களத்தில் நான் சென்றிருக்க வேண்டும்.
அது கழிந்தது. இப்போது இங்குள்ள இப்புதியவளை யாணர் ஊரன் காணின் தன்னவளாகக் கொள்ளாது
விடுதல் இல்லை. அப்படி அவன் கொள்ளின் முடிப்பன் என்பானது மலையில் உள்ள மூங்கில் போலும்
பலமகளிர்  தோள்கள்  அழகு  தொலையும், அவை  இரக்கத்தக்கன.  (அதனால்  இப்போதே சென்று
அவனை   அவள்பால்   செல்லாமல்   தடுத்துக்  கொள்வேன்   எனக்  கூறினாள்.  விழாக்காலத்தில்
செல்லாமையால் தலைவி தலைவனை மணந்தாள் என்பது பரத்தை எண்ணம்).