கண்ணும் என்றவாறு. பின்னை என்றதனால் ஏனைய வாயில்களை மறுத்த வழியென்று கொள்க. |
*”புள் இமிழ் அகல்வயல் ஒலிசெந்நெ லிடைப்பூத்த முள்ளரைத் தாமரை முழுமுதல் சாய்த்ததன் வள்ளிதழ் உறநீடி வயங்கிய சுருகதிர் அவை புகழரங்கின் மேலாடுவாள் அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகமே போல்தோன்றுந் தகைபெறு கழனியந் தண்துறை யூரகேள்”. |
அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால் தோய்ந்தாரை அறிகுவல் யானெனக் கமழுநின் சாந்தினாற் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ”. |
“புல்லல் எம்புதல்வனைப் புகலகல் நின்மார்பின் பல்காழ் முத்தணியாரம் பற்றினன் பரிவானான் மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின் பூணினாற் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ” |
கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின் சென்னி வண்டிமிர் வகையினர் வாங்கினன் பரிவானால் நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ; |
என வாங்கு, |
“பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே யவர்வயின் சென்றீ அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து” |
(கலித் -79) |
எனவரும். |
மனையோள் ஒத்தலின் தன்னோரன்னோர் மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணும் என்பது-தான் மனையாளை ஒத்தலாற் தன் போல்வார் தலைவற்கு மிகையெனக் குறித்தகோளின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. |
* பொருள்: பக்கம் 118ல் காண்க. |