உதாரணம் |
“வாளை வாளிற் பிறழ நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயிலேற்குங் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல்வெள் ளாம்பலுருவ நெறித்தழை யைதக லல்குலணிபெறத் ததைஇ விழவிற் செலீஇய வேண்டுமன்னோ யாணரூரன் காணுநனாயின் வரையாமையோ வரிதேவரையின் வரைப்போல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையு நற்றோ ளளிய தோழி தொலையுநபலவே” |
(நற்றிணை-390) |
இதனுள், விழவிற் செல்கின்ற தலைவியைக் கண்டு காமக்கிழத்தி இவள் தோற்றுப் பொலிவோடு புறம்போதரக் காணின் வரைவனெனவும் அதனான் இல்லுறை மகளிர் பலருந்தோள் நெகிழ்பவெனவும் பொறாது கூறியவாறு காண்க. |
காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் தழீஇக் கழறி அம்மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற் கண்ணும். காதற் சோர்வில் - தானுங் காய்தற்குரிய காமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலானும் சுடப் பாட்டாண்மையிற் சோர்வில்-அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மையினாலும் தாய்போல் தழீஇக் கழறி-தலைவியைச் செவிலிபோல் உடன்படுத்திக் கொண்டு தலைவனைக் கழறி, அம்மனைவியைக் காய்வின்று அவன்வயிற் பொருத்தற் கண்ணும்-அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனித்தே கூட்டுமிடத்தும். |
இது, துனி நிகழ்ந்துழித் தலைவனது தலைவளரிளமைக்கு ஒரு துணையாகி முதிர்ந்த காமக்கிழத்தி இங்ஙனங் கூட்டு மென்றார். |
உதாரணம் |
“வயல்வெள்ளாம்பல் சூடுதெரிபுதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சி லோய்நடை முதுபகடாருமூரன் றொடர்புநீ வெஃகினை யாயினெவன்சொற் கொள்ளன் மாதோ முள்ளெயிற்றோயே |