பக்கம் எண் :

கற்பியல் சூ.10195
 

நீயே பெருநலத்தையே யவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநாளெய்தித்
தண்கமழ் புதுமலரூதும்
வண்டெனமொழிப மகனென்னாரே”
1

(நற்றிணை -290)
 

இதனுள்,  நீ   இளமைச்  செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை
அயின்றாற்போலப்   பிறர்  அவனை  நுகர்ந்தமை  நினக்கு   இழுக்கன்றெனவும்     அவனோடு  கூட்டம்
நெடுங்காலம்  நிகழ்த்த  வேண்டும்  நீ  -  அவள்   அவனோடு கட்டில்வரை    எய்தியிருக்கின்றாளென்று
ஊரார்  கூறுகின்ற சொல்லை என்னைப்போல    வேறுபட்டுக்  கொள்ளாதே, கொள்வது நின் இளமைக்கும்
எழிற்கும்  ஏலாதெனவும்    அவனை    வண்டென்பதன்றி  மகனென்னாராதலின் அவன் கடப்பாட்டாண்மை
அதுவென்றுங் கூறினாள்.
 

இனி ‘என் சொற், கொள்ளன் மாதோ’ (நற்-290)
 

என்பதற்கு    என்    வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக்
கொள்க.
 

“ஈண்டுபெருந் தெய்வத்தியாண்டுபல கழிந்தெனப்
பார்த்துரைப் புணரி யலைத்தலிற்புடைகொண்டு
மூத்துவினை போகிய மூரிவாயம்பி
னல்லெருது நடைவளம் வாய்த்தெனவுழவர்
புல்லுடைக்காவிற்றொழில்விட்டாங்கு
நறுவிரை நன்புகைக் கொண்டார்ச்சிறுவீ
ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழன்
முழவு முதற் பிணிக்குந் துறைவனன்றும்
விழுமிதிற் கொண்ட கேண்மை நொவிதிற்
றவறு நற்கறியா யாயினெம்போன்
நெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர்
மலர்தீய்ந்தனையர் நின்னயந்தோரே”
2

(நற்றிணை - 315)


1 பொருள்: பக்கம் 186ல் காண்க.

2 பொருள்: தெய்வம்    என்னும்படியான   யாண்டுகள்   பல  கழிந்த காரணத்தால் பாறையிற் கடல்நீர்
அலைத்தலால்   அலைப்புண்டு   முதிர்ந்து  இனித்தொழிற்கு உதவுதல்  நீங்கி  உடைந்த  வாயுடைய
தோணியை, உழவர்