இதனுள் மூத்துவினைபோகிய அம்பிபோலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப்போலாது இவள் இப்பருவத்தே இனையளாதற்பாலளோ மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போலவெனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க. |
இன்நகைப் புதல்வனைத்தழீஇ இழை அணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணும். இன்நகைப் புதல்வனைத்தழீஇ இழை அணிந்து-கண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல்வனை எடுத்துப் பொலங் கலத்தாற் புனைந்து கொண்டு பின்னர் வந்த வாயிற் கண்ணும்-பலவாயில்களையும் மறுத்த பின்னர் வாயிலாகக் கொண்டு புகுந்த வாயிலின் கண்ணும்; |
உதாரணம் |
“என்குறித்தனன்கொல் பாண நின்கேளே வன்புறை வாயிலாகத் தந்த பகைவரு நகூஉம் புதல்வனை நகுவது கண்டு நகூஉ மோரே”1 |
இதனுள் வன்புறை வாயிலாகிய புதல்வனைக் கண்டு நகுவாரைத் தனக்கு நகுவாரைப் போல நகா நின்றானெனக் காமக்கிழத்தி கூறி வாயில் நேர்ந்தவாறு காண்க. ‘பகைவரும் நகூஉம்’ எனவே தான் புலக்கத்தகுந் தலைவியர் புதல்வனென்றாளாயிற்று. |
மனையோள் ஒத்தலில் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்ணும்; மனையோள் ஒத்தலில்-தானும் உரிமை பூண்டமை பற்றி மனையாளொடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின், தன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்-தன்னை ஒக்கும் ஏனை மகளிரின் |
உழுதற்குரிய நடைவளம் நீங்கியது என்று எருதினை சோலையில் விட்டது போலப் புன்னைமர அடியில் கட்டி வைக்கும்படியான துறையையுடைய தலைவனே! சிறப்பாகப் கொண்ட நட்பினைச் சிறிதும் தவறுவராதபடி அறியாயாயின், நின்னால் விரும்பப்பட்ட மனைவியர் எம்மைப் போலவே நெகிழ்ந்ததோளராய் அழுத கண்ணராய் மலர் தீய்ந்தாற்போல்வாராவார். 1 பொருள்: பாணனே! நின் கேளாகிய தலைவன் என்ன குறித்துள்ளான்? பகைவரும் விரும்பும் தன் தலைவியின் புதல்வனைக் கண்டு எம்மைச் சார்ந்தவர் நகா நிற்க-அதனைத் தனக்கு ஏற்றதாகக் கொண்டு தான் மகிழ்கின்றான். |