இதனுட் பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம் என்றமையிற் சேரிப் பரத்தையைப் புலந்து கூறுதன் முதலியன வுங்கொள்க. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக. |
அகம்புகல்மரபின் வாயில் கூற்று |
150. | கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள் முகம்புகல் கிழமையிற் கிழவோற் குரைத்தல் அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய | (11) |
இளம். |
என் - எனின், அகம்புல் மரபினவாய வாயில்கள் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று. |
(இ-ள்) கற்பு முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவுமாகிக் கிழவோள் மாட்டுளதாகிய தன்மைகளை முகம்புகு தன்மையானே1 தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின்2 வாயில்கட்குரிய என்றவாறு. |
செய்யுளியலுள் “வாயிலுசாவே தம்முளுரிய” (சூ-191) என்பதனால், தலைமகற்குரைத்தலேயன்றித் தம்முள் தாம் கூறுதலும் உரியரென்று கொள்க. |
“மதவலியானை மறலிய பாசறை இடிஉமிழ் முரசம் பொருகளத்தியம்ப வென்று கொடி எடுத்தனன் வேந்தனுங் கன்றொடு கறவை புல்லினம் புறவு தொறுகளக் குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந் திளையர் ஏகுவனர் பரப்ப விரியுளைக் கடுநடைப்புரவி வழிவாய்ஓட வலவன் வள்புவலி உருப்பப்புலவர் |
1 முகம்புகு தன்மை - தலைவன் எதிர் சென்று முகம் நோக்கிப் புகலும் தன்மை. 2 அகம்புகு மரபு - வீட்டினுட் சென்று தலைவன் தலைவியருடன் அடிக்கடிப் பேச்சு நிகழ்த்தும் வழக்கம். |