இதன் பொருள்: கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கமும், காமமும்-அன்பும் நற்பால் ஒழுக்கமும்-எவ்வாற்றானுந் தங்குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமும், மெல் இயற்பொறையும்-வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் ஆனைபோலாது ஒருதலையாக மெல்லென்ற நெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறையும், நிறையும்-மறை புலப்படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும், வல்லிதின் விருந்து புறந்தருதலும்-வறுமையுஞ் செல்வமுங் குறியாது வல்லவாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ்வித்தலும், சுற்றம் ஓம்பலும் - கொண்டோன்புரக்கும் நண்புடை மாந்தருஞ், சுற்றத்தாருங் குஞ்சர முதலிய காலேசங்களும் பல படைமாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்டலும், அன்னபிறவுங் கிழவோள் மாண்புகள்-அவை போல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமைகளை முகம்புகன் முறைமையிற் கிழவோற்கு உரைத்தல்-அவன் முகம் புகுதும் முறைமை காரண்த்தால் தலைவற்குக் கூறுதல், அகம்புகன் மரபின் வாயில்கட்கு உரிய-அகநகர்க்கட் புகுந்து பழகி அறிதன் முறைமையினையுடைய வாயில்களுக்குரிய என்றவாறு. |