பக்கம் எண் :

210தொல்காப்பியம் - உரைவளம்
 

திருவள்ளுவப் பயன் முதலிய சான்றோர் செய்யுட்களுள் அறப் பகுதியிற் கூறப்பட்டன.
 

உதாரணம்
 

“தற்காத்துத் தற்கொண்டாற்பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

(குறள்-56)
 

எனவும்,
 

“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும்மழை”

(குறள்-55)
 

எனவும்,
 

“மனைத்தக்க மாண்புடையவள் ஆகித்தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”
1

(குறள்-51)
 

எனவும்,
 

“கட்கினியாள்காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் - உட்கி
இடனறிந்தூடி, இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்”
2

(நாலடி - 384)
 

இதனுள், ‘கட்கினியாள்’ என்றதனான் கோலஞ் செய்தல் வேண்டுமெனக் கூறியவாறாம்.
 

எனவும்,
 

“அடிசிற் கினியாளை அன்புடையாளைப்
படுசொற் பழிநாணுவாளை - அடிவருடிப்


1 பொருள்:  மனையறத்துக்கு  வேண்டிய  குணங்களுடையளாய் தன்னைக்கொண்ட கணவனின் வருவாய்
வளத்துக்கேற்ற செலவு செய்வாள் யாவள் அவள் வாழ்க்கைத் துணையாவாள்.

2 பொருள்:    கண்ணுக்குக்  காட்சிக்கு  இனியவளாய்  காதலன்  விருப்பப்படித்  தன்னைப்  புனைந்து
கொள்வாளாய்  கற்புச்  சிறப்பாற்  கண்டார் அஞ்சும் படியுள்ளாளாய், தன் சிறப்புக்கண்டு ஊர் மகளிர்
நாணும் சிறப்புடையாளாய், கணவன் உயர்வுக்கு அஞ்சி இடமறிந்து அவனொடு ஊடி இன்பம் மிக அது
நீங்கும் மடமொழியுடைய பெண்ணே பெண் ஆவாள்.