பக்கம் எண் :

கற்பியல் சூ.12211
 

பின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால்
என்துஞ்சுங் கண்கள் எனக்கு”

 

எனவும்வரும். இவை நல்லவை யுரைத்தல்.
 

“எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம், சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி -அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை”
1

(நாலடி-363)
 

எனவும்,
 

“தலைமகனில் தீர்ந்தொழுகல் - தான் பிறர்இல் சேறல்
நிலைமையில் தீப்பெண்டி ரில்சார்தல் - கலனணிந்து
வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல்
கோற்றொடியார் கோள்அழியும் ஆறு”

(அறநெறிச்-94)
 

எனவும் வரும். இந்நிகரான அல்லவை கடிதலாம்.
 

பிறவும் அன்ன.
 

நச்
 

இது செவிலிக்குரியவாகுமென்ப. இது செவிலிகூற்று உணர்த்துகின்றது.
 

இதன்   பொருள்: கழிவினும், வரவினும், நிகழ்வினும்  வழி கொள-மூன்று காலத்துத் தத்தங் குலத்திற்கு
ஏற்கும்படியாக,  நல்லவை    உரைத்தலும்-முற்கூறிய  கற்பு  முதலிய  நல்லவற்றைக் கற்பித்தலும் அல்லவை
கடிதலும் -காமநுகர்ந்த  இன்பமாகிய கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும்  செவிலிக்கு  உரிய  ஆகும் என்ப -
செவிலித்தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.


1. பொருள்:     கணவனைச்   சினம்மூட்டி   ‘அடி’   என்று  எதிர்  நிற்பவள்  அவனுக்குச்  கூற்றம்.
காலைப்போதில்  சமையலறை  சென்று  சமைத்து  உண்பியாதவள்  கணவனுக்குநோய்.  சமைத்ததைப்
பரிமாறாதவள் வீட்டில் வாழும்பேய். இம்மூவரும் கணவனைக் கொல்லும் படைபோல்வாராவர்.