உதாரணம்
“காட்சினியாள் காதலன் காதல் வகைபுனைவா ளுட்குடையாளூராணியல்பினா -ளுட்கி யிடனறிந்தூடியினிதினுணரு மடமொழி மாதராள் பெண்”1
(நாலடி - 384)
கட்கினியாள், இதுகாமம், வகைபுனைவாள், இது கற்பு உட்குடையாள், இஃது ஒழுக்கம், ஊராண்மை, இது சுற்றம் ஓம்பல், ஊடியுணர்தல், அல்லவை கடிதல்.
“நாலாறு மாறாய் நனி சிறிதாயெப்புறனு மேலாறு மேலுரை சோரினு - மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழ மாண்கற்பி னில்லாளமர்ந்ததேயில்”2
(நாலடி - 383)
என்னும் வெண்பா விருந்துபுறந்தருதல் கூறியதுமாம்.
இனி ‘ஆகும்’ என்றதனானே செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவுங் கொள்க.
“கானங் கோழிக் கவர் குரற்சேவ னுண்பொறி யெருத்திற்றண் சிதருறைப்பப் புதனீர் வாரும் பூநாறுபுறவிற் சீறூரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செல்லினுஞ் சேந்து வரலறியாது செம்மறேரே”3
(குறுந் - 242)
“மறியிடைப்படுத்த மான்பிணை போலப் புதல்வனடு வணனாக நன்று மினிது மன்றவவர் கிடைக்கை முனிவின்றி நீனிற வியலகங் கவைஇய வீனுமும்பரும் பெறலருங் குரைத்தே”4
(ஐங்குறுநூறு -401)
1 பொருள்: பக்கம் 210ல் காண்க.
2 பொருள்:பக்கம் 46ல் காண்க.
3 பொருள்: பக்கம் 204ல் காண்க.
4 பொருள்: மான் கன்று இடையில் கிடக்க மானும் பிணையும் இருப்பதுபோலப் புதல்வன்இடையிருக்கத்