இதன் பொருள்-கற்பு எனப்படுவது-கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது, கரணமொடுபுணர-வேள்விச் சடங்கோடே கூட,1 கொளற்கு உரி மரபிற்கிழவன்-ஒத்த குலத்தோனும் மிக்க குலத்தோனுமாகிக் கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைவன், கிழத்தியை- ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளுமாகிய தலைவியை, கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப -கொடுத்தற்குரிய முறைமையினையுடைய இருமுது குரவர் முதலாயினர் கொடுப்ப, கொள்வது-கோடற்றொழில் என்றவாறு. |