வ - று.1இடம்படு ஞாலத் தியல்போகொடிதே தடம்பெருங்கட் பாலக னென்னும்-கடன்கழித்து முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய். (இ - ள்.) அகன்ற பூமியினது தன்மையோ கொடியதொன்றே!மிகப்பெரிய கண்ணினையுடைய பிள்ளையென்று சொல்லும்கொடுக்கக் கடவதனைக் கொடுத்து முட்போலக் கூரியபல்லினையுடையாள் தலைப்பட்டாள், மாறுபாடு கெடாதவளப்பம் மிக்க எயிற்றினையுடைய கூற்றுவன்வாயிலே எ-று. (5) 259. பூசன்மயக்கு பல்லிதழ் மழைக்கட் பாலகன் மாய்ந்தெனப் புல்லிய பெருங்கினைப்பூசல் கூறின்று. (இ - ள்.) பூவையொத்து மழைபோலக்குளிர்ந்த கண்ணினையுடைய பிள்ளை இறந்தானாகப் பொருந்திய பெரிய சுற்றத்தினது ஆரவாரத்தினைச் சொல்லியது எ-று. பல்லிதழென்றார் பல இதழினையுடைய பூவை,ஆகுபெயரான். வ - று. அலர்முலை யஞ்சொ 2லவணொழியவவ்விற் குலமுதலைக் கொண்டொளித்த லன்றி- நிலமுறப் புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ கொல்லிய வந்தொழியாக் கூற்று. (இ - ள்.) பணைத்த முலையினையும் அழகிய சொல்லினையுமுடைய தலைவி அவ்விடத்தே ஒழிய அம்மனையிற் குலத்திற்கு மூலமாகிய பிள்ளையைக் கைப்பற்றி மறைத்தலல்லது நிலத்திலே மிகப் பொருந்திய சுற்றத்தின் ஆரவாரத்திற்கு இரங்குமோ? கொல்வான்வேண்டி வந்து தவிராத கூற்றம் எ-று. கூற்று, பூசல் பரியுமோவென்க எ-று. (6) 260. இதுவுமது வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும் ஆய்ந்த புலவ ரதுவென மொழிப. (இ - ள்.) அரசன் இறந்தானாக அகன்ற பூமியினுள்ளார் இரங்கினும் ஆராய்ந்த அறிவினையுடையோர் முன்பிற்றுறையென்று சொல்லுவர். எ-று. வ - று. எண்ணி னிகல்புரிந்தோ ரெய்தாததில்போலும் கண்ணினொளிர் வேலான் கரந்தபின் -அண்ணல் புகழொடு பூசன் மயங்கிற்றாற் பொங்கும் அகழ்கடல் வேலி யகத்து. (இ - ள்.) விசாரிப்பிற் போரினை விரும்பிய வீரர் பெறாதது ஒன்றுமில்லை போலும்:கண்ணிற்கு எறிக்கும் வேலினையுடையான் இறந்த.
1. தொல். புறத். சூ. 19, இளம், மேற். 2. (பி-ம்.)'லவளொழிய'. |