(இ - ள்.) கடுவினையாளன் தன்மேற்பகைவருடைய கூரிய அம்பு அழுந்தத் தான் நினைந்த வினையைமுடிவு செய்யானாகி இறத்தலும் மூதானந்தம் எ-று. வ - று. முந்தத்தான் மாவொடு புக்கமுனையமருட் சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக்-குந்தத்தாற் செல்கணை மாற்றிக் குருசில் சிறைநின்றான் கொல்கணைவாய் வீழ்தல் கொடிது. (இ - ள்.) பலரினும் முந்தத் தான் குதிரையுடனே களம் புக்கு, முற்பட்ட பூசலில் எதிர்த்துவந்தார்சிதறப் போரை விலக்கிக் கைச்சவளத்தால் தன்மேல்வரும் அம்பை நீக்கி உபகாரி, கரைபோலச் சேனைதாங்கிநின்றான், கொல்லும் கோல்வாயிலே படுமது கொடிதாயிருந்ததுஎ-று (10) 264. ஆனந்தம் ஆடமைத் தோளி விரிச்சியுஞ் 12சொகினமும் வேறுபட வஞ்சி விதுப்புற் றன்று. (இ - ள்.) அசையும் மூங்கில்போன்ற தோளினையுடையாள் நற் சொல்லும் நிமித்தமும் விகற்பிப்பப்பயப்பட்டு நடுக்கமுற்றது எ-று. வ - று. வேந்தார்ப்ப வெஞ்சமத்து வேலழுவந்தாங்கினான் சாந்தா ரகலத்துத் தாழ்வடுப்புண்-தாந்தணியா மன்ன சொகின மயங்கின வாய்ப்புளும் என்னாங்கொல் பேதை யினி. (இ - ள்.) அரசர் ஆரவாரிப்ப வெய்ய பூசலிடத்துஅயிற்காட்டைத் தடுத்தவனுடைய சந்தனம் நிறைந்த மார்பிடத்து ஆழ்ந்த வாயினையுடைய புண்கள்தாம் தீரா; பொருந்தா, நிமித்தமும்; கலங்கியிருந்தன, விரிச்சியும்; என்னாமோ, மடவாள் இப்பொழுது ! எ-று (11) 265. இதுவுமது தவப்பெரிய வெஞ்சமங்குறுகும் அவற்கிரங்கினு மத்துறையாகும். (இ - ள்.) மிகப்பெரிய வெய்ய பூசலிற் பொருந்திய வீரனுக்கு வருந்தினும் முன்பிற்றுறையேயாம் எ-று. வ - று. இன்னா சொகின மிசையாவிரிச்சியும் அன்னா வலம்வருமென் னாருயிரும்-என்னாங்கொல் தொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப் புக்கான் விடலையும் போர்க்கு.
1. பு.வெ. 265: 1, 310, கொளு, உரை. (பி-ம்.)2. 'சோகியும்' |