(இ - ள்.) இறந்தோன்றன்னுடைய நாமத்தை அன்புற்றுச் சொல்லினும் முன்புசொன்ன துறையென்று சொல்லுவர் அறிவுடையோர் எ-று. வ - று. நின்று நிலமிசையோ ரேத்த நெடுவிசும்பில் சென்று கழிந்தான் செருவெய்யோன் - என்றும் அழலுங் கதிர்வே லவன்புகழ் பாடி உழலு முலகத் துயிர். (இ - ள்.) 1தற்பராய் நின்ற பூமியினுள்ளோர் துதிப்ப நீடும் பெரிய வானிலே போயினான், பூசல்விரும்புவோன்; எந்நாளும், எரியும் ஒளி வேலினையுடையவனது கீர்த்தியைச் சொல்லிச் சுழலும், எல்லாவுலகத் துயிரும் எ-று. (15) (காஞ்சிப் பொதுவியற்பால்) (சூத்திரம் 12). | மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி பெருங்காஞ் சிய்யே பொருண்மொழிக் காஞ்சி புலவ ரேத்தும் புத்தே ணாட்டொடு முதுகாஞ் சிய்யொடு காடுவாழ்த் துளப்பட | | 5 | மையறு சீர்த்தி வருமிரு மூன்றும் பொய்தீர் காஞ்சிப் பொதுவியற் பால. |
என்-னின், இதுவும் பொதுவியற்பாலவாமாறுஉணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) முதுமொழிக் காஞ்சி முதலாகக்காடு வாழ்த்து ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் பொதுவியற்பாலவாம் எ-று. அவற்றுள் :- 269. முதுமொழிக் காஞ்சி பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருண்முடி புணரக் கூறின்று. (இ - ள்.) எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர்குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகியஅறம்பொருளின்பத்தை அறியச் சொல்லியது எ-று. வ - று. ஆற்றி னுணரி னருளறமாமாற்றார்க்குப் போற்றார் வழங்கிற் பொருள்பொருளாம்-மாற்றிப் புகலா தொழுகும் புரிவளையார் மென்றோள் அகலா தளித்தொழுக லன்பு. (இ - ள்.) நெறியான் அறியின், அருள் தன்மமாகும்; வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பிற் பொருள் பொருளாம்; மாறி விரும்பாது ஒரு நெறிப்பட நடக்கும் முறுக்குவளையினையுடையோர்தம் மெல்லிய தோளை நீங்காதே அளித்து நடக்குமது காதலாம் எ-று. (1)
1. (பி-ம்.) 'தற்பரராய்' |