பக்கம் எண் :

345. மல்வென்றி

வ - று. கண்டான் மலைந்தான் கதிர்வானங்காட்டியே
கொண்டான் பதாகை மறமல்லன் - வண்டார்க்கும்
மாலை துயலு மருவிய மாமலை
போலுந் திரடோள் புடைத்து.

(இ - ள்.) எதிரி மல்லனைக் கண்டான், மாறுபட்டான், ஒளியான் மிக்க ஆகாயத்திடத்தே அவனை எழ வீசிக் குறித்த தாயத்தைக் கொண்டான், வெற்றிக்கொடியினையுடைய மறமல்லன்; வண்டொலிக்கும் மாலை அசையும் அருவியினையுடைய பெரிய மலையையொக்கும் திரண்ட தோளினைத் தட்டி எ-று.

புடைத்துக் கொண்டான் .
தட்டுகை - உடக்கரிக்கை .

346. உழவன் வென்றி

(வ - று.) மண்பத நோக்கி மலிவயலும்புன்செய்யும்
கண்பட வேர்பூட்டிக் காலத்தால் - எண்பதனும்
தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயர்போல்
வித்தித் தருவான் விளைவு .

(இ - ள்.) நிலத்தின் செவ்வியைப் பார்த்து மிக்க வயலிடத்தும் கொல்லையிடத்தும் பரக்க ஏரைப்பூட்டி உழுது நற்காலத்தால் நெல்லு வரகுமுதலாயின எட்டுணவினையும் தவழுந் திரையொலிக்கும் கடலை வேலியாகவுடைய பூமியிடத்துத் தாயரைப்போல வித்திவிளைப்பான், பல்லுயிர்க்கும் ஆக்கம் எ-று.

எண்பதனாவன :- நெல் வரகு சாமைதினை இறுங்கு கேழ்வரகு கொள் உழுந்து என்பன; "நெல்வரகுசாமை தினையிறுங்கு கேழ்வரகு , கொள்ளுழுந்தோ டெண்விளைவாகும்."

(4)

347. ஏறுகொள் வென்றி

வ - று. குடைவரை யேந்தியநங் கோவலனேகொண்டான்
அடையவிழ் பூங்கோதை யஞ்சல் - விடையரவம்
மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத்
தின்று நமர்விட்ட வேறு .

(இ - ள்.) மலையாகிய குடையையேந்திய நம்ஆயனே கொண்டான், இலை மலரும் பூமாலையினையுடையாய், அஞ்சாதேகொள்; மிக்க ஆரவாரம் மன்றிடத்தே ஒலிப்பக்கண்டார் மயங்கப் பறையறைற்து இன்று நம் உறவுமுறையார் விட்ட ஏற்றை எ-று.

(5)