348. கோழி வென்றி வ - று. பாய்ந்து மெறிந்தும் படிந்தும்பலகாலும் காய்ந்தும்வாய்க் கொண்டுங் 2கடுஞ்சேவல் -ஆய்ந்து 3நிறங்கண்டு வித்தகர் நேர்விட்டகோழிப் புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு. (இ - ள்.) எழப்பாய்ந்தும் காலின் முள்ளை யிட்டிடித்தும் தாழ்ந்தும் பலகாலும் கோவித்தும்4கூவியும், கடிய சேவற்கோழி, ஆராய்ந்து கோழிகளின் 5நிறமறிந்து கோழிநூல்வல்லவர் சொல்லுக்குச் சொல் ஒப்பாகவிட்ட கோழியைப் புறங்கண்டும் தான் பின்பும் போர்க்கு வாரா நின்றது எ-று. புறங்கண்டும் போர்க்கு வரும். சொல்லுக்குச் சொல் வெல்லும், ஆமைக்கு ஆமை வெல்லும், தெங்குக்கு தெங்கு வெல்லும் எனக் கோழிகளின் 4நிலமறிந்துவிடுதல் வித்தகர் - கோழிநூல் வல்லவர். (6) 349. 1தகர்வென்றி வ - று. அருகோடி நீங்கா தணைதலுமின்றித் திரிகோட்ட மாவிரியச் சீறிப் - பொருகளம் புக்கு மயங்கப் பொருது புறவாயை நக்குமா நல்ல தகர். (இ - ள்.) சேர ஓடி மீளாதே மிகக்கிட்டுதலும் இன்றிப் புரிந்த கொம்பினையுடைய எதிர்த்த தகர்கெடக் கோபித்துப் போர்க்களத்தே புக்குக் கலங்கப் பொருது புறவாயினை நக்கும் , நல்ல தகர் எ-று . (7) 350. யானை வென்றி (வ - று.) கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட குஞ்சரம் வென்ற கொலைவேழம் - துஞ்சா துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்றன் நிழலையுந் தான்சுளிக்கு நின்று. (இ - ள்.) அட்டிமதுரமிட்டுத் திரட்டின கவளத்தைத் தன்கையிலே கொண்ட யானையை வென்ற கொலைத்தொழிலையுடையவேழம், உறங்காதே கணையத்தையும் பாய்ந்து முறித்து ஓடாதே தான் தன்னுடைய நிழலையும் வெகுண்டு நின்று துகைக்கும் எ-று. உம்மை : சிறப்பு . (8) 351. பூழ் வென்றி சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற் சொல்லும் பலவுள சொன்னபின் - வெல்லும்
1. பட்டினப். 77, ந. (பி.ம்.)2. 'கடுஞ்சொல்லாராய்ந்து' 3. 'நிறங்கொண்டு' 4. 'கூடியுங்கடிய சொற்கோழி' 5. 'திறமறிந்து' |