பக்கம் எண் :

9. ஆகோள்

வென்றார்த்து விறன்மறவர்
கன்றோடு மாதழீஇயன்று.

(இ - ள்.) பகைவர் முனையினைக்கடந்து ஆரவாரித்து வெற்றியினையுடைய வீரர் கன்றுடனே பசுநிரையைக் கைக்கொண்டது எ - று.

வ - று.1கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால்
நெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை.

(இ - ள்.) புலிகள் தம்மில் இணையொத்துத் திரட்சிகொண்ட தன்மைத்து; உயரிய மலையிடத்து நீண்டமூங்கிலொலிக்கும் ஊரினடுத்திரண்ட பசுவினைக் கைப்பற்றி அவ்விடத்துநின்று நீங்காராய் நிணத்தைக் கோத்த வேலினையுடையார் நின்ற நிலை எ - று.

ஆல் : அசை.

(9)

10. பூசன்மாற்று

கணம்பிறங்கக் கைக்கொண்டார்
பிணம்பிறங்கப் பெயர்த்திட்டன்று.

(இ - ள்.) நிரைத்திரட்சி பெருக்கக் கைப்பற்றின கரந்தையார்தம் பிணம் பெருக்க வெட்சியார் கெடுத்தது எ - று.

வ - று.2சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் - தாழ்ந்த
குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த
புலவுக் கணைவழிபோய்ப் புள்.

(இ - ள்.) வெட்சியார் வளைந்துகொண்ட நிரை மீளச் சூழ்ந்து கிட்டின கரந்தையார் பட்டு வீழ்ந்தார்; வீழ்ந்தவருடைய தசையைத் தின்ன வேண்டிப் படிந்தன, வளைந்த கொடியவில்லாற் சிறந்த கையினையுடைய கூற்றத்தையொப்பார் எய்த புலால் நாறும் அம்பு போன வழியே போய்ப் பறவைகள் எ - று.

(10)

11. சுரத்துய்த்தல்

அருஞ்சுரத்து மகன்கானத்தும்
வருந்தாம னிரையுய்த்தன்று.

(இ - ள்.) அரிய வழியிடத்தும் பரந்த காட்டின்கண்ணும் நோவுபடாதபடி பசுநிரையைச் செலுத்தியது எ - று.

வ - று.1புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான் - 3தன்மேற்


1. தொல். புறத். சூ. 3, இளம். ந. மேற். 2. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 3. நன். சூ. 301, மயிலை. விரு.மேற்.