(இ - ள்.) தணியாத உவகையினையுடையளாகித் தன்னுடைய சுவாமி தலையிலே சூடின வண்டுநிறைந்த நறுநாற்றம் வீசும் மாலை வாழ்வதாகவென்று நோக்கினாள், அலங்காரமுடைத்தாக ஒழுங்குபட்டு ஒளிவிடா நின்ற பல்லினையும் அழகிய பெருமையினையு முடைய மறத்தி, மணியணிந்த பசுமிக்க மன்றத்தை எ - று. எயிற்றி கண்டாளெனக் கூட்டுக. (13) 14. பாதீடு கவர்கணைச் சுற்றங் கவர்ந்த கணநிரை அவரவர் வினைவயி னறிந்தீந் தன்று. (இ - ள்.) கவர்த்த தலையம்பினையுடைய கிளை கொள்ளைகொண்ட பசுநிரையைச் செய்தார் செய்த தொழில்வகையை அறிந்து கொடுத்தது எ - று. வ - று.1ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற் கூறிட்டார் கொண்ட நிரை. (இ - ள்.) ஒள்ளிய வாட்போரினை மேற்கொண்டோர்க்கும் ஒற்றுத் தெரிந்து சொன்னோர்க்கும் நிமித்தம் தப்பாவகை சொன்ன அறிவுடையோர்க்கும் தம்முடன் வேறுபடுவாரை மாறுபாடு கெடுத்த வெற்றியினையுடைய மறவினையாளர் தம் சீறூரிடத்துப் பங்கிட்டார் கைக்கொண்டு வந்த நிரையை எ - று. (14) 15. உண்டாட்டு 2தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று. (இ - ள்.) கட்டி ஆர்க்கும் வீரக்கழலினையுடைய தறுகண்ணர் மதுவையுண்டு மனங்களித்து ஆடியது எ - று. வ - று.3இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி களிகொண்ட நோக்கங் கவற்றத் - தெளிகொண்ட வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேற் செங்கண் மறவர் சினம். (இ - ள்.) இளியென்னும் இசையினைக்கொண்ட இனிய சொல்லினையுடைய இளைய சீமதியான வேட்டுவிச்சி களிப்புக்கொண்ட பார்வை வருத்தவும் தெளிவுகொண்ட வெவ்விய கள்ளையுண்ட மகிழ்ச்சி மிகவும் கெடுவது போலும், பகைவர்மேற் சிவந்த கண்ணினையுடைய வீரர் செற்றம் எ - று. சினம் விளிவதுகொலெனக் கூட்டுக. இஃது 4"ஒருமை சுட்டிய" என்பதனுளமைத்த, "ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப" என்பதுபோலாம். (15)
1. தொல். புறத். சூ. 3, இளம். ந. மேற். 2. புறநா. 257 - 8. உரை. மேற். 3. தொல். புறத். சூ. 3, இளம். 4. தொல். எச்ச. சூ. 65, சே. ந. |