சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

158 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கருத்துண் டாதல் கருத்தின் றாதல்
இருமையும் ஆதல் ஈருருபு இணைதல்
கருத்தா ஆதல் அகநிலை யாதல்
தெரிநிலை ஆதியாய் வருஞ்செயப் படுபொருள்
இயற்றப் படுதல் எய்தப் படுதல்
வேறு படுக்கப் படுதல் ஆதியும்
 
  அவ்வெழு வகையுள் அடங்கும் என்ப.’ (31)
  செயப்படு பொருளினும் செப்பின் பெருகும்.’ (32)
எனக்கூறியுள்ளார்.

                 பிரயோக விவேகநூலார்
 

  “அண்ணிய கர்மத்து அபிகிதம் ஒன்றே அநபிகிதம்
தண்ணிய ஈச்சிதம் தன்னொடு அநீச்சிதம் தான்இருமை
எண்ணிய நற்கருத் தாவொடு அகதிதம் என்றுஓரைந்தாம் பி.வி.12
‘இயற்றப்படுவது நிருவருத் தியமே.’
‘வேறு படுக்கப் படுவது விகாரியம்.’
‘பிராப்பியம் எய்தப் படுவதென்று இசைப்பர்.’
 

இனி, வாக்கியபதீயத்துள்ளும் கையடத்துள்ளும் நிருவர்த்தியம் விகாரியம்
பிராப்பியம் எனக் கூறிய வண்மை சேனாரையர் முதலாயினார் இயற்றப்படுவதும்
வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதும் எனச் செயப்படுபொருளை மூன்றாக்குவர்.
நன்னூலாரும் ஆக்கல், அழித்தல் அடைதல் முதலாக சைனேந்திரன் மதம் பற்றிப்
பலவாக்குவர்” என்று பனிரண்டாம் நூற்பாவிலும் அதன் உரையிலும் கூறியன
உட்கொள்ளத்தகும்
 

சூறாவளி
 

குழையை உடையன் என்றவழிக் குழையும் உடையன் எனக் கருதுதல் தொழிலை
உற்று நின்றமையின் செயப்படு பொருளேயாம் என்றார், செயப்படு பொருள் உண்மை
உணராமையின்.