சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-41159

குழையை உடையன் சாத்தன் என்றவழி, உடையன் என்னும் விகுதியான்
உணர்த்தப்படும் கருத்தாவின் தொழிலை உற்று நிற்பின் அன்றே செயப்படுபொருளாம்?
அவ்வாறன்றி உடையன் எனக் கருதுவான் ஒருவன் தொழிலை உற்று நிற்பது செயப்படு
பொருள் எனக் கொள்ளின், எயிலை இழைத்தான் என்பதும் இழைத்தான் எனக் கருதுதல்
தொழிலை உற்று நின்றமையின் அதனையும் அவ்வாற்றான் செயப்படு பொருள் எனல்
வேண்டும். அன்றியும் குழையை உடையன் என்புழி, உடையானும் உடையன் எனக்
கருதுதல் தொழிலை உற்று நின்றமையின், அவனையும் ஆண்டுச் செயப்படு பொருள்
எனக் கொடல் வேண்டும். ஆதலின் அது போலியுரை என்க.
 

அமைதி
 

செயப்படு பொருளாவது ஒரு வினைமுதல் செய்யும் தொழிலினை உறுவது என்று
விளக்கியுள்ளார்.

சாத்தன் குழையை உடையன் என்ற தொடரைச் சாத்தன் குழையை உடையன்
எனக் கருதுகிறான் என விளக்கினார் வினைமுதல் சாத்தன், அவன் தொழில் உடையன்
எனக் கருதுதல், அத்தொழிலினை உறுவது குழை. இங்ஙனம் நச்சினார்க்கினியர்
தெளிவாக உரைத்த விளக்கங் கொள்ளாது மலைவாகப் பொருள் கொண்டு
இடர்ப்படுகிறார் முனிவர் என்பது வெளிப்படை.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக் குறிப்பு
அவ்விரு முதலின் தோன்றும் அதுவே.’
 

 

தொல்.சொல். 71

  ‘காப்பின் .... ..... ...... ...... என்மனார்.’ 72