சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

160 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘ஐ என் பதுகரு மத்துஇரண் டாவ ததுஒருகால்
பைய அழிதரும்.’
வீ.சோ.34
  ‘ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
எய்தும் குறிப்பும் இயலவரும்.’
நே.சொல்.18
  ‘இரண்டா வதனுருபு ஐயே அதன்பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்.’
நன். 296
  ‘ஐயே இரண்டா வதனுரு பாகும்.’ மு.வீ.பெ.55
  ‘காப்பின் ஒப்பின் ஆக்கலின் அழித்தலின்
அடைதலின் நீத்தலின் அஞ்சலின் உடைமையின்
அன்ன பிறவும் அதன்பய னிலையே.’
 
மு.வீ.பெ.56
 


மூன்றாம் வேற்றுமை
 

 
200 மூன்றா வதன்உருபு ஆல்ஆன் ஓடுஒடு
கருவி கருத்தா உடன்நிகழ்வு அதன்பொருள்.
 
 

இது மூன்றன் எண்ணுமுறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு ஆலும் ஆனும்
ஓடும் ஒடுவும் என்பனவாம் அதன் பொருள் கருவியும் கருத்தாவும் உடன் நிகழ்வும்.
ஆம் என்றவாறு.

மேல் ஆல் ஒன்றையும் இதற்கு உருபாகச் சொல்லி ஈண்டு உருபு நான்கு என்றல்
மலைவாம்பிற எனின், ஆண்டுப் பெயரும் முறையும் காட்டுதல் மாத்திரைக்கு
வழக்கிடத்தும் செய்யுள் இடத்தும் பயின்று வருவதனைச் சொன்னார்; ஈண்டு
அவ்வேற்றுமைக்கு வரும் உருபு எல்லாம் எடுத்து ஓதினார் ஆகலான் ஆகாது என்க.

இக்கடாவிடை இங்ஙனம் மேல் வருவனவற்றிற்கும் உய்த்து உரைக்க.