சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

162 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இவை ஒன்றனால் ஒன்று பண்ணப்படுதல் என்னும் பொருள. கோலான் இயன்ற
குடம், வேலான் இயன்ற வடு என்பன போல்வன துணைக் காரணம். இவை எல்லாம்
ஏதுப் பொருளவாய் நின்ற காரகக் கருவி. உணர்வினால் உணர்ந்தான், அறிவினால்
அறிந்தான் என்பனபோல்வன முதற்காரணம். பகையினால் அறிந்தான், ஒளியினால்
உணர்ந்தான் முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது என்பனபோல்வன
துணைக்காரணம். இவை எல்லாம் ஏதுப் பொருளாவாய் நின்ற ஞாபகக்கருவி.

கொடியொடு துவக்குண்டான், ஊசியொடு குயின்ற தூசும்பட்டும் என்பன போல்வன
உடன் நிகழ்ச்சி. கொடி சாத்தனைத் தொழில் உறுவிக்குங்கால் அக்கொடி அவனை நீங்கா
உடன் நிகழ்ச்சியை விளக்குதலானும், ஊசி சாத்தன் தொழில் பயனைத் தூசிலும் பட்டிலும்
உய்க்குங்கால் அவ்வூசி அவற்றை நீங்கா உடன் நிகழ்ச்சியை விளக்குதலானும், இவை
முறையே வினைமுதல் பொருள் மேலும் கருவிப்பொருள் மேலும் வந்தன. இங்ஙனம்
வரவே கருவி கருத்தா எனவே அடங்குதலின் உடன் நிகழ்வு என வேறு கூறவேண்டா
எனினும், அது மிகுந்து காட்டுதலின் வேறு கூறினார் போலும் என்பது. இக்கருத்தே பற்றி
அன்றே,
 

  ‘வினைமுதல் கருவி அனைமுதற்று அதுவே (தொல்.சொல். 73)

என்ற ஆசிரியர் தொல்காப்பியனாரும், மீட்டு உடன் நிகழ்வு கூறியதூஉம் என்பது. இவை எல்லாம் உருபானும் ஆன் உருபானும் ஒடு உருபானும் வந்தன.
 
  ‘உலகத்தோடு ஒட்டஒழுகல்’ எனவும் (குறள்-140),
  ‘நாவீற்றிருந்த புலமா மகளோடு நன்பொன்
பூவீற்றிருந்த திருமாமகள் புல்லநாளும்’
சீவக.30

எனவும் வருவன எல்லாம் ஓடுஉருபான் வந்தன.

வாயால் தக்கது வாய்ச்சி-அறிவான் அமைந்த சான்றோர்- என்பனபோல ஒன்றான்
ஒன்று தகுதல் என்னும் கருவிப்