பக்கம் எண்: தேடுக
பக்கம் : 10 பன்னிருபாட்டியல்

87

நகரத் தாறு மநுடத் தடைவே
யேனை யாறுங் கேட்டைபூ ரட்டாதி.
 

(7)

88 1பத்திய பகரத் தொருநான் கிரண்டா
றுத்திர மத்தஞ் சித்திரை யாகும்.
 

(8)

89 மகரத் தாறு மூன்று மூன்று
மகமா யிலியம் பூர மாகும்.
 

(9)

90 யாவே யுத்திரட் டாதி யேனை
யூயோ மூலமென் றுணர்ந்திசி னோரே.
 

(10)

91 யூயோ விரண்டு மேனாண் மூலம்
யாவே யுத்திரட் டாதிநாள் பெறுமே.
 

(11)

92 ஒருநான் குரோகணி வகர மவ்வகை
மற்றை நான்கு மகசிர மாகும்.
 

(12)

93 2மூவகை யாய்ச்செய் தொன்றுமூன் றைந்தே
ழட்டம ராசி வைநா சியக்கால்
விட்டனர் பின்னர் மேவினர் கொளலே.
 

(13)

94 இரண்டீ ரிரண்டா றெட்டொன் பானெனத்
திரண்ட நாளே செல்வம் புகுதரும்.
 

(14)

95 நன்மை பொருள்பே றின்பந் தருமெனத்
தொன்னெறிப் புலவ ருரைத்தனர் துணிந்தே.
அவை, -மூவகை யொன்பதின் முதன்முத னாளாம்.
 

(15)


     [பி-ம்.] 1 பற்றிய.
     2 “சொல்லியநாள் இருபத்தேழையும் ஒன்பதொன்பதாக மூன்று கூறாக்கிப் பாட்டுடைத்தலைவனியற்பெயரின் முதலெழுத்தினாளைத் தொடங்கிக் கூறுகளை யெண்ண, ஒன்று மூன்று ஐந்து ஏழ்வரிற் பொருந்தா. அல்லாத நாட்களுட் பாட்டுடைத்தலைவன் பெயர் முதலெழுத்தினிராசி தொடங்கி எட்டாமிராசிநாட்களும் பொருந்தா. வைநாசியமாகிய எண்பத்தெட்டாங்கால் நின்ற நாளும் பொருந்தாது” என்பது வச்சணந்திமாலையுரை.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்