பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 9

79

ஐவகைக் குறிலு மகரமுத லாக
வல்லூ றாந்தை வலியான் குருகே
மெல்லியன் மயிலென விளம்பின ரிவற்றின்
பொருத்தமும் விருத்தமும் பகையும் பலனும்
விரித்தினி தெண்ணி மேவினர் கொளலே.
 

(1)

80 எண்ணப் பட்ட அகரமுத லைந்தும்
வல்லூ றாந்தை வலியான் குருகே
மெல்லியன் மயிலென விளம்பிய வியற்கையிற்
புள்ளென விளம்பும் புலவரு முளரே.                                பரணர்.
 

(2)

9.- நாள்.1

81 2மொழிக்கு முதலா கியவெழுத் துக்கட்
கோதிய நாள்வகை யியற்றுதல் கடனே.
 

(1)

82 உயிர்முத னான்குஞ் 3செயிர்தபு கார்த்திகை
ஐந்து மூன்று மவற்றி னடைவே
வந்தபூ ராட முத்திரா டம்மே.
 

(2)

83 ககர வருக்க வகைநாள் விரிப்பி
னான்கு மிரண்டு மூன்று மூன்று
மோண மாதிரை புனர்பூசம் பூசம்.
 

(3)

84 சகர நான்கைந் தொருமூன் றிவற்றின்
வகைநா ளிரேபதி முதன்மூன் றென்ப.
 

(4)

85 ஞகர 4வருக்கத் தொருமூன் றவிட்டம்.
 
 

(5)

[ஞா, ஞெ, ஞொ. உ-ம்: ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.]

86 தகர வருக்கத் திரண்டேழ் மூன்றற்கு
வகைநாள் சோதி விசாகஞ் சதயம்.
 

(6)


     1 ‘அமுதெழுத் தல்லா வேனை யெழுத்து
நாளொடு புணர்த லேத மின்றே’                                                       (90)
என்று ஒரு சூத்திரம்மட்டும் தனியே எழுதப்பட்டுளது . [ச. பி.]

     [பி-ம்.] 2 நாமநாண் மொழிக்குமுத லாகிய வெழுத்து. 3 செயிர்தீர். 4 வருக்கத்து மூன்று மவிட்டம்.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்