பக்கம் எண்: தேடுக
பக்கம் : 8 பன்னிருபாட்டியல்

70

ஒகரக் குகர முதாசீன மாகு
மெகரம் பகை1யா மெனல்.
 

(17)

71 நட்புப் பகையாம் பகையுநட் பாமவை
வைத்த முறையே 2கொளல்3
 

(18)

7. - கன்னல்.

72 குணபாற் பரிதி தென்பா லியமன்
குடபால் வருணன் வடபாற் சோமன்
றிசைமுக னடுவாந் தெய்வ நிலைகளிற்
குறிலைந் தமைத்து முதன்மூன்றுங் கொள்கென
நெறியறி புலமை யறிஞர்நேர்ந் தனரே.
 

(1)

73 அருக்க னியமன் வருணன் சோமன்
பிரமனுந் தெய்வ நிலையெனப் பேசுவர்.
 

(2)

74 4அகரமுத லாக முறையா னெய்தவத்
தெய்வந் தம்மேல் வைக்கப் படுமே.                                                          கபிலர்
 

(3)

75 உரைத்த குறிலைந் தொரோவொன் றாக
வருக்கனொ டாகு மவ்வாறு நாழிகை.
 

(4)

76 அகரந்தானே யருக்கனோ டுதிப்ப
விகர மின்புற வெய்தி யிருக்கு
முகர நடக்கு மெகர முறங்கு
மொகரந் துஞ்சுமென் றுரைத்தனர் புலவர்.
 

(5)

77 அவரவர் பெயர்முத லெழுத்துவந் துதிப்ப
வவரவர்ப் பாடி னாக்கந் தருமே. இந்திரகாளியார்.
 

(6)

78 இராப்பொழு திற்கு மிவ்வகை கொள்க.
 

(7)


     [பி-ம்.] 1 யாகு மே. 2 கொளின். 3 இதற்குப்பின், ‘உய்த்துணர்ந்து நாடி னுயிர்மெய்ககு மிவ்வகையே, வைத்துணர்ந்து கொள்க வகுத்து’ என்று ஒரு சூத்திரம் காணப்படுகிறது. [ச.பி.] 4 அம்முத.
 
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்