பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 7
அகரக் கெகர முதாசீன மாகு
மகரக் கொகரம் பகை.

56

நட்பே யுதாசீ னம்பகை யென்னு
மொப்புடைக் குறிப்பி னொருமூன் றாகும்.
 

 (3)

57 பால குமார வரச னென்னு
மூவகைத் தானமு நட்பெனப் படுமே.
 

(4)

58 ஒழிந்த விரண்டு முதாசீ னம்1பகை.
 

(5)

59 பாட்டுடைத் தலைவ னியற்பெயர் முன்னெழுத்துப்
பால னாக நால்வகை யெழுத்தும்
வட்டமாய் முறைமையி னியலு மென்ப.
 

(6)

60 பெயர்முத லெழுத்துப் பால னாக
நால்வகை யெழுத்தினும் வட்ட மாக
முறையே நட்புதா சீனம் பகைவரும்.
 

(7)

61 அகரந் தனக்காய நட்பென் றுரைப்பர்
இகர வுகரங்க டாம்.
 

(8)

62
 

(9)

63 உகர மெகர மெனவிரண்டு மென்ப
விகரந் தனக்காய நட்பு.
 

(10)

64 இகரக் கொகர முதாசீன மாகு
மிகரக் ககரம் பகை.
 

 (11)

 

65

உகர வெழுத்துக்கு நட்பாய் வருமே
யெகர வொகரங்க டாம்.
 

(12)

66

உகரக் ககர முதாசீன 2மென்ப
வுகரக் கிகரம் பகை.
 

(13)

67

எகரக் கொகர மகரநட் பாகு
மிகர முதாசீன மாம்.
 

(14)

68

எகரந் தனக்குப் பகையென் றுரைப்ப
துகர வெழுத்தென் றுணர்.
 

 (15)

69

ஒகர வெழுத்துக் ககர வெழுத்து
மிகர வெழுத்துநட் பாம்.
 

(16)


  [பி-ம்.] 1 பகையுமாம்.

 மாகு, மிகரம் பகையென் றறி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்