|
3-பெயர்ப்பொருத்தம். |
|
144 |
எண்வகைப் பெயரு நண்ணுதல் செப்பிற்
குலங்குடி கோத்திர நலம்பெறு குணமே
மனமே யாணை மன்னிய சிறப்பே
யியற்பெய ரென்றிவை தம்மு ளியன்ற
சிறப்பியற் பெயரெனு மிருதிறத் திற்கு
1மயக்கற மொழிமுத லெடுக்குஞ் சொல்லுடன்
பொருத்தங் கொள்வர் கருத்துணர்ந் தோரே. |
|
|
(1) |
| 145 |
பார்ப்பா ரரசர் வணிகர்வே ளாளரெனப்
பாற்படு நாற்பெயர் குலப்பெய ராகும். |
|
|
(2) |
| 146 |
குடிப்பெய 2ராவன கூறுங் காலைச்
சேரன் சோழன் பாண்டிய னென்றிவை
போல்வன பிறவும் பொருத்தங் கொளலே. |
|
|
(3) |
| 147 |
கோத்திரப் பெயரே கூறுங் காலைத்
தாதைகுடிப் பெயரைத் தக்கவற் றியற்றல். |
|
|
(4) |
| 148 |
குணப்பெய ரேனப் புலவோர் கொடுப்பத்
தணப்பில வாகித் தழுவும் பெயரே. |
|
|
(5) |
| 149 |
மனப்பெய ராவன தனக்குத் தானே
யெனக்கிது வேண்டுமென் றெய்தும் பெயரே. |
|
|
(6) |
|
[இஃ திராசாக்க ணாய னடியார் தோழன்.] |
| 150 |
ஆணைப் பெயரே வலியோ ரஞ்சப்
பேணி யுலகம் பேசும் பெயரே. |
| |
(7) |
|
151 |
சிறப்புப் பெயரே தெரியுங் காலைச்
சிறப்புடை வேந்தன் கொடுக்கும் பெயரே. |
| |
(8) |
|
152 |
சாதியி லுள்ளோர் தமக்குத் தாமே
நீதிகொள் 3சிறப்பியற் பெயர்கொளற் குரியர். |
| |
(9) |
|
153 |
முடியுடை வேந்தன்முற் குலத்தோர்க் கல்லது
பட்டமும் பூவும் பூணு மாழியு
நட்டமி னலமலி சிறப்புப் பெயருங்
கொடாஅ னெனமொழிப குலமொழிப் புலவர். |
| |
(10) |
|
| [பி-ம்.] 1 மயக்கறு. 2
ராவது. 3 சிறப்பிற். |