| |
‘கோத்திரப் பெயரே கூறுங் காலைக்
காப்பியன் கவுணியன் காசிப னென்றிவை
போல்வன பிறவும் பூசுரர்க் காகும்’. |
| |
(76) |
| |
‘அரசர் கோத்திரப் பெயரே கூறிற்
குடிப்பெய ரதனை வைத்தவர்க் கியற்றல்.’ |
| |
(77) |
| |
‘தந்தையர் பெயர்வழிப் பெயரன்பெய ரென்று
சிந்தித் திடுவ தியற்பெய ராகும்’. |
| |
(83) |
| |
‘தந்தைக்கு முந்திய தெய்வப் பெயரும்
மிக்கோர் பெயரும் விதியிற் புனைவ
தியற்பெய ரென்ப வியல்புணர்ந் தோரே’. |
| |
(84) |
| |
‘எண்வகைப் பெயரி னிருமூன்று பெயரொழித்
தியற்பெயர் சிறப்புப் பெயரிரண் டிற்கு
மயக்கறு மொழிமுதற் பொருத்தங் கொளலே’. |
| |
(85) |
| |
‘பாடுங் குரிசி லியற்பெயர்க்கு முன்வந்து
கூறுங் குறிநிலை கொண்டு சிறப்பின்
ஆகிய பால ராதி பெயர் . . .
நீக்கி யியற்பெயர் கொண்டமுத வெழுத்து
நின்ற நிலனே பால னாகத்
தென்றமிழ்ப் புலவர் திண்ணிதிற் கொளலே’. |
| |
(86) |
|
சொல்லியல் முற்றிற்று. |
|
------ |