|
157 |
ஒன்றே யாகியு மொன்றுபல வாகியும்
பலவொன் றாகியும் பாற்படு மினமே. |
|
|
(2) |
| 158 |
அவற்றுள்,
ஒன்றா கியவின மெனப்பட் டனவுலா
வாற்றுப் படைவகை மடன்முத லாயின. |
|
|
(3) |
| 159 |
1ஒன்றுபல வாகிய வினமந் தாதி
கோவை காப்பிய மாதியாக் கூறுவன. |
|
|
(4) |
| 160 |
பலவொன் றாகிய வினமெனப் பட்டன
கலித்தொகை குறுந்தொகை 2நெடுந்தொகை 3முதலாயின.
|
|
|
|
| 161 |
பலவொன் றாகிய வினமெனப் பட்டன
கலம்பக மும்மணிக் கோவைமுத லாயின. |
|
|
(6) |
|
1.- பாப்பொருத்தம்.
(வெண்பா.) |
| 162 |
அந்தணர் சாதி யாகிய வௌ¢ளைக்குச்
சந்திரன் றன்னொடு தகைமிகு வியாழன்
கடவுளர் கார்த்திகை 4முதலேழ் நாளா
மீனங் கடகந் தேளே யோரை
சந்தனம் விரைபூ வந்தண் மல்லிகை
வெண்மதி 5நிறனே வண்ண நிலனே
முல்லை யென்னச் சொல்லினர் புலவர். |
|
|
(1) |
|
(ஆசிரியப்பா.) |
| 163 |
காவலர் சாதி யாகிய வகவற்
காகிய கடவுளர் செங்கதிர் செவ்வாய்
நாளே மகமுத னாளே ழாகுஞ்
சிங்கந் தனுவே மேட மோரை
செஞ்சந் தனம்விரை கழுநீர் பூவே
செந்நிற நிறனே நன்னிலங் குறிஞ்சி. |
| |
(2) |
|
[பி-ம்.] 1 ஒன்று பலவா கியவின மென்பவை, அந்தாதி கோவை
காப்பிய மாகும்.
[ச. பி.] 2 நெடுந்தொகை என்பது
அகநானூறு.[பி-ம்.] 3 முதலியன. 4 முதனா ளேழா.
5 நிறமே. |